நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா நடை பெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட கலெக்டர் மு.அருணா பேசியதாவது:
தேசத்தந்தை காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்புக்கும், மனித நேயத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, இன்னுயிர் துறந்தார். அவரது நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள் ளப்படுகிறது.
மேலும் ஜனவரி 24 முதல் 30ம்தேதி வரை தமிழ்நாடு அரசால் மனித நேய வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வார காலத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மனிதநேயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாணவ, மாணவிகள் மனித நேயத்துடனும், ஒழுக்கத்துடனும் கல்வி கற்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மனித நேய வார விழாவை முன் னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற 97 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அருணா, உதகை அரசு பழங்குடியினர் கல்லூரி மாணவிகள் விடுதி, ரங்கநாதபுரம் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பபள்ளி, தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல் வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார;.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் உதய குமார், உதகை வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் (எ) மாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) தமிழ்மணி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.