fbpx
Homeபிற செய்திகள்தென்காசியில் கோகிலம் முதியோர் பராமரிப்பு இல்லம் திறப்பு விழா

தென்காசியில் கோகிலம் முதியோர் பராமரிப்பு இல்லம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் கோகிலம் முதியோர் பராமரிப்பு இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக சாம்பவர் வடகரை சேகர குரு சுந்தர பாண்டியபுரம் கிளை பாஸ்டர் ஜெபரத்தினம் ஜெபம் செய்தார்.
இதனை சிறப்பு அழைப்பாளராக தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக்அப்துல்லா தலைமையேற்று புதிய இல்லத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் திருமலைகுமார், மாநில காங்கிரஸ் பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி, கடையநல்லூர் முன்னாள் காங்கிரஸ் நகர தலைவர் அசன் இப்ராஹீம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முக சுந்தரம், கடையநல்லூர் கேஎப்ஏ. 1986 டிரஸ்ட் நிர்வாகி சாகுல் ஹமீது, தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், ஏ ஜிஎம்.கணேசன் மற்றும் சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை சேகர இறை மக்கள் திரளானோர் பங்கேற்றனர். நிறைவில் கோகிலம் முதியோர் பராமரிப்பு இல்லத்தின் நிர்வாகி புஷ்பா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img