fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி பள்ளியில் சீர்வரிசை திருவிழா

தூத்துக்குடி பள்ளியில் சீர்வரிசை திருவிழா

பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் சீர்வரிசை திருவிழாவும், பொங்கல் விழாவும் நடைபெற்றது. தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதுபெற்ற தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியராக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற நெல்சன் பொன்ராஜ் பணிசெய்து வருகிறார்.

அவர் இப்பள்ளியில் தலைமையா சிரியராக பணியேற்றதிலிருந்து ஆண்டு தோறும் பெற்றோர்கள் பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீர்வரிசையாக வழங்குவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் சுமார் ரூபாய் 30,000 மதிப்புள்ள கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்கான பொருள்களை வரிசையாக கிராமத்தின் முக்கிய வீதி வழியாக அனைத்துப் பெற்றோர்களும் கொண்டு வந்து பள்ளியின் தாளாளரும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் உபதலைவருமான அருள்திரு தமிழ்செல்வனிடம் வழங்கி ஆசிபெற்றனர்.

பெற்றோரோடு பிள்ளைகளும் பொருள்களை கொண்டுவந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பின் தா ளாளர் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கூடுகை நடைபெற்றது. அதில் பள்ளியின் தாளாளர் பள்ளியின் சிறப்பைக் குறித்தும் பெற்றோர்கள் கொண்டுவந்த சீர்வரிசைகளைக் குறித்தும் பாராட்டி பேசினார். அதன்பின்பு பொங்கல் விழா கொண்டாடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜகோபால்நகர் சேகர குருவான மதன் பிரபாகர் கலந்து கொண்டார். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img