fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் அங்கக வேளாண்மை கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

நீலகிரியில் அங்கக வேளாண்மை கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை, தோட்டக்கலை வளாகத்தில், தோட்டக் கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நடைபெற்ற மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா நேற்று குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் பெருகிட ஒரு முன்னோட்டமாக மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கு நடை பெறுகிறது.

இக்கருத்தரங்கில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிலையம், சாண்டிநல்லா செம்மறி ஆடு இனவிருத்தி நிலையம், AYUSH நிறுவனம் ஆகிய நிறுவனங்களிலிருந்து விஞ்ஞானிகள் கலந்து கொண்டு அங்கக வேளாண்மைக் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவார்கள்.

இக்கருத்தரங்கினை நீலகிரி மாவட்ட விவசாய பெருங்குடிமக்கள் பயன் படுத்திக்கொண்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தோட்டக் கலைத்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் பயரிடப்படும் பல்வேறு அவரை ரகங்கள், அயல் நாட்டு காய்கறிகள் வகைகள், தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து மருத்துவ பயிர்கள், மத்திய உருளை கிழங்கு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பல்வேறு உருளை கிழங்கு ரகங்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவித்த விவசாயிகளின் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாசனை திரவிய பொருட்கள் அடங்கிய கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, துணை இயக்குநர் அப்ரோஸ்பேகம், விவசாய பெருங்குடி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img