நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரம் பழத்தோட்ட பகுதியினைச் சேர்ந்த விவசாயி சின்னப்பன் தோட்டத்தில் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணையின் இதர உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரம் பழத்தோட்ட பகுதியி னை சார்ந்தவர் விவசாயி சின்னப்பன், கடந்த 5-ஆண்டுகளுக்கு மேலாக ஆல்டன் இயற்கை விவசாய பண்ணை என்ற பெயரில் அங்கக வேளாண்மை செய்து வருகிறார். தோட்டக்கலைத் துறை யினரின் வழிகாட்டுதலின் படி தோட்டக்கலைப் பயிர்களோடு, பழ பயிர்கள், ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, அசோலா சாகுபடி, தீவன பயிர்கள், மூலிகை பயிர்கள், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையமாக செய்து வருகிறார். மேலும் தனது தோட்டத்தில் இயற்கை சார்ந்த உரங்கள், பூச்சி விரட்டிகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தி வருகிறார்.
அதோடு தோட்டக்கலைத் துறையின் மூலமாக மானியத்தில் பண்ணைக் குட்டை, பழநாற்றுக்கள், தேனீ பெட்டி, மண்புழு உரப்ப டுக்கை, நடமாடும் காய்கறி விற்பனை வண்டி, தெளிப்பான் போன்றவைகள் பெற்றுள்ளார். மேலும், அட்மா திட்டத்தின் செயல் விளக்கத்தின் மூலமாக அசோலா சாகுபடி, சூரிய சக்தியால் இயங்கும் விளக்குபொறி, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுபாடு தொகுப்பு மற்றும் வனவிலங்கு விரட்டி தொகுப்பு போன்றவை பெற்று பயன்படுத்தி வருகிறார். அட்மா திட்டத்தின் மூலம் சிறந்த விவசாயிக்கான மாவட்ட அளவிலான விருதினை பெற்றுள்ளார். மேலும், சிம் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட் சியில் சிறந்த பழப்பயிர் சாகுபடி யாளர் என்ற விருதினையும் பெற் றுள்ளார். தனது பணி ஓய்வு காலத்திலும் ஓய்வாக இல்லாமல் மற்ற விவசாயிகளுக்கு ஒரு முன் உதாரணமாகவும், முன்னோடி விவசாயியாகவும் உள்ளார்.
மேலும், தோட்டக்கலைத் துறையின் மூலமாக இவரது பண்ணை யில் மற்ற விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த பயிற்சிகள், கண்டுணர்வு சுற்றுலாக்கள், செயல் விளக்கங்கள், பண்ணைப் பள்ளி நடத்தப்படுகின்றன. மேலும், துறை யின் சார்பாக கிராம அளவில் நடைபெறும் பயிற்சிகளுக்கு பயிற்று நராகவும் உள்ளார். மேலும், இவர் தோட்டக்கலைத்துறையின் மூலமாக பிரதி சனிக்கிழமை தோறும் நடை பெறும் அங்கக வேளாண்மை வாரச் சந்தையில் இலாபகரமாக விற்பனை செய்து வருகிறார்.
மேற்காணும், செயல்பாடுகளை குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இவரது தோட்டத்தில்; அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணையின் இதர உற்பத்தி பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, தோட்டக் கலைத்துறை இணை இயக்குனர் ஷபிலாமேரி, துணை இயக்குநர் அப்ரொஸ்பேகம், உதவி இயக்குனர் (சிம்ஸ் பூங்கா) விஜயலட்சுமி மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.