fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகள் இசைக்கேற்ப நடனமாடி அசத்தல்

மாற்றுத்திறனாளிகள் இசைக்கேற்ப நடனமாடி அசத்தல்

சேலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உங்கள் வழியில் பறக்க (fly on your way) என்கிற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு சினிமா இசைக்கு ஏற்ப நடனமாடி அசத்தினர். இதனை ஜேக் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினர் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கினர்.

தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறன் மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி கையாள வேண்டும் என்கிற விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img