நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சிதலைவர் அருணா பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 163 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சி தலைவர் அருணா மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 163 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி வழங்கும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர், தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள 4 அமைப்புசாரா தூய்மைப்பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளையும், தமிழ் வளர்ச்சித்துறையின்
சார்பாக 2023-2024ம் ஆண்டின் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் கூடலூர் ஜி.டி.எம்.ஓ மெட்ரிக் பள்ளி மாணவி வர்ஷிகாவுக்கு ரூ.15,000/-க்கான காசோலையினையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி பாராட்டினார்.