பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகே கூடலூர் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவதற்கான பூமிபூஜை நேற்று (செவ்வாய்கிழமை) நடந்தது.
மேட்டுப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு 1, செல்வபுரம் அம்சி நகரில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டிலும், சாமி செட்டிபாளையத்திலுள்ள 8 ஆவது வார்டு காமராஜ் நகரில் ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு காங்கிரீட் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளார்.
பூமிபூஜை
இதனையடுத்து நடந்த பூமிபூஜைக்கு நகராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்தார்.ஆணையாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
இதில் வார்டு கவுன்சிலர்கள் எஸ்.ஆர்.பி சாந்தாமணி,ச.தவமணி,நகரப் பொறியாளர் சி.கவிதா, வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.என்.ஜெயராமன், நகர அதிமுக செயலாளர் கே.குருந்தாசலம்,ஊர் பிரமுகர் வேலுச்சாமி, முன்னாள் கவுன்சிலர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.