fbpx
Homeபிற செய்திகள்பயனீர் கல்வி நிறுவனங்களில் மாணவர் குழுக்கள் பொறுப்பேற்பு

பயனீர் கல்வி நிறுவனங்களில் மாணவர் குழுக்கள் பொறுப்பேற்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கல்வி நிலையங்களில் கல்வி மற்றும் விளையாட்டு அணிகளின் மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா நடந்தது.

பயனீர் கல்வி நிலைய வளாகத்தில் பயனீர் ஆங்கில வழித் தொடக்கப்பள்ளி, பயனீர் மேல்நிலைப்பள்ளி, பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆகியன செயல்பட்டு வருகின்றன.

இதில் 2023-24 கல்வியாண்டுக்குரிய பள்ளி மாணவர் தலைவர், செயலாளர், விளையாட்டு செயலாளர், பல்வேறு விளையாட்டு அணிகளின் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொறுப்பேற்கும் விழா தேவராஜன் கலையரங்கத்தில் நடந்தது. பள்ளிச் செயலர் அபர்ணா ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆங்கில வழித் தொடக்கப்பள்ளியின் ஆங்கில ஆசிரியை பி.ராமலட்சுமி வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரியா, தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை தேவி ஆகியோர் மாணவப் பிரதிநிதிகளுக்கு பதக்கங்களை அணிவித்து பொறுப்பேற்கச் செய்தனர். பின்னர் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

பயனீர் நிர்வாக அலுவலர் பத்மநாபன், உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் சித்ரா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img