கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி, ஹெச்.சி.எல். பவுண்டேஷன், சிறுதுளி ஆகியவை இணைந்து, கோவையை அடுத்த துடியலூர் ரெயில் நிலையத்தில் காடு வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தியது.
சென்னை டி.ஜி. வைஷ் ணவ் கல்லூரி முதல்வர் முனைவர் சந்தோஷ்பாபு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, காடு வளர்ப் புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து “மியாவாக்கி” முறையில் 6,500 மரக்கன்றுகள் அங்கு நடப்பட்டன.
இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சமூகப்பணியியல் துறை மாணவர்கள், டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி மாணவர்கள், ஹெச்.சி.எல். பவுண்டேஷன் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் ஜெயசதீஷ், ஒருங்கிணைப்பாளர்கள் வி.சந்திரசேகர், ஆர்.எஸ். கிருஷ்ணசுவாமி, சிறு துளி அமைப்பின் உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடு களை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலு வலர்கள் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன், அ.சுபாஷினி, முனைவர் ஆர்.நாகராஜன், முனைவர் யு.பிரவீன், முனைவர் ஏ.சஹானா பாத்திமா, சமூகப்பணியியல் துறைத்தலைவர் ஆர்.பிரியதர்ஷினி ஆகியோர் செய் திருந்தனர்.