fbpx
Homeபிற செய்திகள்போதைப் பொருட்கள் விற்பனை: கடைகளில் போலீஸ் திடீர் ஆய்வு

போதைப் பொருட்கள் விற்பனை: கடைகளில் போலீஸ் திடீர் ஆய்வு

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறி வுரைகளின் படி பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வணிகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏதும் விற்பனை செய்யப்படவில்லை.

நெகிழி பொருட்கள் மட்டும் 35 கிலோ பறிமுதல் செய்து ரூ.7500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளருக்கு அபராதம் ரூ.25000 விதிப்பது மட்டும் இல்லாமல் விற்பனை செய்யும் கடைக்கு சீல் வைக்கப்படும் என துணைக் காவல் கண்காணிப்பாளர் வணிகர்களை எச்சரித்தார்.

படிக்க வேண்டும்

spot_img