கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், காளப்பட்டி கொங்கு நகர் பகுதியில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநகராட்சியின் சார்பில், ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி (நிரந்தர மக்கள் நீதிமன்றம்) நாராயணன், மாவட்ட நீதிபதி செந்தில்குமார், மாவட்ட சட்டப்பணிகள் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ், மாவட்ட கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், வன அலுவலர் (பயிற்சி) கிரிஷ் பவுலே, வழக்கறிஞர்கள் மதிவாணன், பரிமளா, கீர்த்தனா, ரேணுகாதேவி, மாநகராட்சி உதவி ஆணையர்கள் முத்துசாமி, துரைமுருகன், செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், உதவி பொறியாளர் குமார், கொங்கு நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மருதாசலம் பாலசுப்பிரமணி, மாவட்ட பசுமை தோழர் ராகினி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.