தர்மபுரி நான்கு ரோட்டில் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர் தர்பூசணி இளநீர் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் துவக்கி வைத்து பழங்களை வழங்கினார்.
தொடர்ந்து சாலையில் சென்றபொது மக்களுக்கும் மோர் பாக்கெட் மற்றும் தர்பூசணி பழங்களை அவர் வழங்கினார். இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் உண்டு மகிழ்ந்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், தர்மபுரி நான்கு ரோடு சிக்னல் பகுதியில் வெயிலில் போக்குவரத்து போலீசார் தங்களது கடமையை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில் நீர்மோர் வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கும் இவை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் டிஎஸ்பி சிவராமன் எஸ்.ஐ.,க்கள் சரவணன் கோமதி மற்றும் எஸ்ஐ ரகுநாதன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.