fbpx
Homeபிற செய்திகள்புத்தாண்டு இரவு கொண்டாட்டம்: கோவை புரோஜோன் மாலில் ஏற்பாடு

புத்தாண்டு இரவு கொண்டாட்டம்: கோவை புரோஜோன் மாலில் ஏற்பாடு

கோவை புரோஜோன் மாலில் முதன் முறையாக நகரின் மிக உயரமான இன்டோர் கிறிஸ்துமஸ் ட்ரீ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புரோஜேன் மால் மைய இயக்குனர் அம்ரிக் பனேசர், செயல்பாட்டுத்தலைவர் முசாமில் ஜிங்ரு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் சகாய நாதன், தொழில்நட்ப தலைவர் எஸ்வந்த் ராவ் ஆகியோர் கூறியதாவது:

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்காலங்களை முன்னிட்டு எ வெரி பியரி கிறித்துமஸ் என்ற தலைப்பில்
கொண்டாடும் விதமாக மிக உயரமான கிறிஸ்துமஸ் ட்ரீ அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மால் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும் மற்றும் அலங்காரத்துடன் கூடிய செல்பி ஜோன்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம் வருகிற ஜனவரி 5ம் தேதி வரை நடக்கிறது. மேலும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒரு பிரம்மாண்ட உணவு திருவிழா மற்றும் டிசம்பர் 31ம் தேதி இரவு அன்று 2025 புத்தாண்டை டிஜே நைட், லைவ் இன் கான்சர்ட், டிஜே பிளாக், ஷாம்விசால், மானசி பேச்சுலர் பிராண்ட் ஆகியோர் பங்குபெறும் செலிபிரட்டி நைட் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.

மேலும் விழாக்கால சலுகையாக மாலில் உள்ள 100க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் மீது 50 சதவீத தள்ளுபடி விற்பனையும் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img