பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்ஏ வரலாறு மாணவி எஸ். லிதன்யாஸ்ரீ விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழக நிலை கிராஸ் கன்ட்ரி போட்டியின் பெண்கள் 10 கிமீ ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவரின் தன்னலமற்ற முயற்சி, கடின உழைப்பு மற்றும் மிக்க பொறுமையால் இந்திய அளவிலான கிராஸ் கன்ட்ரி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தேசிய கிராஸ் கன்ட்ரி போட்டி ஜனவரி 12ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் சாதனை அவரது உற்சாகத்திற்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டு. தேசிய அளவில் மிளிர்க்க தயாராகும் லிதன்யாஸ்ரீக்கு கல்லூரி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.