கும்பகோணத்தில் ஸ்ரீ டிராபி- 2025 என்ற மாநில அளவிலான போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் அணி கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
கடின உழைப்பால் மாநில அளவி லான போட்டியில் எங்கள் அணி முதல் இடத்தைப் பிடித்து, ரூ.5,000 ரொக்கப் பரிசை பெற்றுள்ளதாக கல்லூரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
முன்னதாக வெற்றி பெற்ற மாண விகள் ப்ரீதா பி.காம் (கேப்டன்), கேத்தரின் விக்டோரியா பி.காம், மைக் மெர்சிலின் பி.ஏ ஆங்கில இலக்கியம், சுபஸ்ரீ பி.எஸ்சி. சிஎஸ், அருந்ததி பி.காம், தக்ஷனா பிபிஏ, ரெங்கநாயகி பி.ஏ. ஆங்கில இலக்கியம், ஷிரின் சித்தாரா பி.ஏ. பொருளாதாரம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.