fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இவான்ஷா 25 என்ற ஆடை அலங்கார நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த ஆடை அலங்கார நிகழ்ச்சியில், B.Voc ஆடை வடிவமைப்புத் துறை, கம்யூனிட்டி கல்லூரி-ஆடை வடிவமைப்பு, இளநிலை ஆடை வடிவமைப்புத் துறை மற்றும் முதுநிலை பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை மாணவிகளால் உருவாக்கப்பட்ட 173 தனித்துவமான ஆடைகள் 15 சுற்றுகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து மாணவிகள் மேடையில் அந்த ஆடைகளை அணிந்து அணிவகுத்தனர். அழ கியல் துறையின் மாணவிகள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் செய்தனர்.

கல்லூரியின் செயலர் முனைவர் யசோதா தேவி வர வேற்பு உரையுடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் பிர்லா செல்லு லோஸின் தலைவர் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இவான்ஷா 25 அறிக்கையை ஆடை மற்றும் அலங்கார வடிவமைப்புத் துறை புலமுதன் மையர் டாக்டர். சாந்தி ராதாகிருஷ்ணன் வழங்கினார். மற்றும் நன்றியுரையை ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறைத் தலைவர் டாக்டர் ராதிகா வழங்கினார்.

இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வடிவமைத்த குழந்தைகளுக்கான ஆடை அணி வகுப்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களின் கருப்பொருள் ஆடை அணிவகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆடை மற்றும் பேஷன் வடிவமைப்புத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் ஆரதி துவக்க விழாவிற்கான வரவேற்புரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img