பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகம் சார்பில் ரேஸ் கோர்சில் இணையவழி மோசடிகள் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி வங்கியின் வட்டாரத் தலைவர் கே.மீராபாய் தலைமையில் இன்று (ஏப்ரல் 11) காலை நடைபெற்றது. இதில் பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்ற வங்கி அலுவலர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.