பஞ்சாப் நேஷனல் வங்கியின் தேனி கிளை, இடமாற்றம் செய்து நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் ஸ்கீம் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்துடன் கூடிய, குளிரூட்டப்பட்ட இந்த கிளையை வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர், வட்டாரத் தலைவர் கே.மீராபாய் ஆகியோர் முன்னிலையில், தேனி அல்லி நகரம் நகராட்சி ஆணையாளர் பி.ஏகராஜ் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் கிளை மேலாளர் கே.டி.கௌதம் மற்றும் பலர் உள்ளனர். இக்கிளையில் குறைந்த வட்டியில் நகைக்கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.