தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது..
தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிக்கரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஏழு எருமை பள்ளம், காலட்டியூர் ஆகிய பகுதிகளில் தரைமட்ட பாலத்திற்கு மேல் மழை நீர் ஆறு போல் ஓடி வருகிறது..
இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்.