fbpx
Homeபிற செய்திகள்ராஜம்மாள் தேவதாஸின் 23ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு

ராஜம்மாள் தேவதாஸின் 23ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு

கோவை அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள், அவினா சிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் பத்மஸ்ரீ டாக்டர். ராஜம்மாள் தேவதாஸின் 23ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப் பட்டது.
இதில் பல்கலைக்கழகத் தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ராஜம்மாள் தேவதாஸ் முக்கிய பங்கு வகித்தார்.

அவரது தொலைநோக்குத் தலைமை அந்த நிறுவனத்தை ஒரு புகழ்பெற்ற கற்றல் மையமாக மாற்றி யுள்ளது என தெரிவித்தனர். அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் டி.எஸ்.கே. மீனாட்சி சுந்தரம் விழாவிற்கு தலை மை தாங்கினார். அப்போது அவர், “கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் குறித்து பேசினார். தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்ககத்தின் மேனாள் இயக்குனர் மற்றும் மதுக்கரை கலை வாணி கல்வியியல் கல்லூரியின் தாளாளார் முனைவர் குமாரசாமி முழுமையான கல்விக்கு டாக்டர் ராஜம்மாள் தேவதாஸின் முன்னோடி பங்களிப்புகளை வலியுறுத்தி பேசினார்.

இந்நிகழ்வில், உதவி நிர்வாக அறங்காவலர் டாக்டர் கௌரி ராமகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, நிறுவனத்தின் நிறுவனர் அவினாசிலிங்கம் அய்யா மற்றும் டாக்டர் ராஜம்மாள் பி. தேவதாஸ் ஆகியோர் நிர்ணயித்த அளவுகோல்கள் நிறுவனத் தின் தலைமுறைகளுக்கு கலங்கரை விளக்கமாக இருக்கின்றன என்று கூறினார். முன்னதாக, மனை யியல் புல முதன்மையர் டாக்டர் எஸ். அம்சமணி வரவேற்புரை நல்கினார். வணிகவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் வெண்ணிலா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img