கோவை எஸ்.என்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் மருந்தியல் கல்லூரியின்31வது பட்டமளிப்பு விழா ஊர்வலத்துடன் நடைபெற்றது. இதற்கு முதல்வர் டி.கே.ரவி தலைமை வகித்தார்.
தொடர்ந்து பட்டதாரிகள், நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் துறைத் தலைவர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து கலந்து கொண்டனர்.
நிகழ்வில் டி.கே.ரவி வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “மருந்தாளுநர்கள் நோயா ளிகள் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் கூறுகையில், “மருந்து களை பாதுகாப்பாக கையாள மருத்துவமனைகள் தர மேலாண்மை அமைப்பு அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்“ என்றார்.
சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.நாராயண சாமி மருந்து ஆராய்ச்சியின் முன்னேற் றத்திற்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தி பேசினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் கல்லூரியுடன் இணைந்து கல்வி ஆண் டின் சிறந்த மாணவர்களான கீர்த்தி, தையல் நாயகி, நந்தினி ஆகியோரை பரிசுகள் வழங்கி கௌரவித்தது.
இதில், 300 பட்டதாரிகள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்வின் இறுதியில் துணை முதல்வர் எம்.கோபால் ராவ் நன்றியுரை வழங்கினார்.