fbpx
Homeபிற செய்திகள்டாடா நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி ஒப்பந்தம்

டாடா நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி ஒப்பந்தம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாடா கன்சல்டென்சி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலமாக பி.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் காக்னிடிவ் சிஸ்டம்ஸ் (சி.எஸ்., சி.எஸ்.), பி.காம்., பிசினஸ் பிராசஸ் சர்வீஸ் (பி.பி.எஸ்.,) ஆகிய பாடப்பிரிவுகள் உருவாக் கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் டாடா கன்சல்டென்சி நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது நீட்டிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, டாடா கன்சல்டென்சி நிறுவன கல்வி பிரிவு தலைவர் சுசீந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img