தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராம கிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றனர். இதில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க உறுதிபூண்டனர்.
மேலும் வாக்களிப்பதன் முக்கியத்து வம் குறித்து இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் கள், பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் மருத்துவ பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் லோ.தீபாநந்தன் தலைமை வகித்தார்.