இந்தியா சவால்கள் அனைத்தையும் வென்று உலகின் குருவாக உயர ஆளுமை மிக்க சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் என சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
பெரியநாயக்கன் பாளையத்திலுள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்ததின 84ஆவது குருபூஜை விழா நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு ஆரத்தியுடன் தொடங்கி இவ்விழாவில் முதல் நிகழ்ச்சியாக வித்யாலய துறவிகள், இசை ஆசிரியர்கள், மாணவர்கள் பிரார்த்தனைகள் நடந்தன.
பின்னர் சிறுமை தண்ட பாணி, மேட்டுப்பாளையம் வாசுதேவன் குழுவினரின் நாமசங் கீர்த்தனங்கள் நடைபெற்றன. இதனையடுத்து 7 மணியளவில் நடந்த கொடியேற்று விழாவிற்கு ஏலகிரி, ராமகிருஷ்ண மடத்தினு டைய தலைவர் சுவாமி விமோ க்ஷானந்தர் தலைமை வகித்து வித்யாலய கொடியை ஏற்றி வைத்தார்.
இதன் பின்னர் கலை அறிவியல் கல்லூரி சுயநிதிப்பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வி மற்றும் அறிவியல் பொருட்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசிய தாவது: உணவுப் பாதுகாப்பு, வறுமை, ஏழ்மை போன்றவை இந்தியா விற்கு மிகப்பெரும் சவால்களாக உள்ளன. இதனை எதிர்கொள்ள அறிவியல்பூர்வமான தீர்வுகளை நாம் காணவேண்டும்/ சிறு தானிய உற்பத்தி, இயற்கை வேளாண்மை போன்றவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள் உயர தகுந்த கல்வி,வேலைவாய்ப்பு, நவீன தொழில்நுட்பங்கள் அவர்களை சென்று சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். மாற் றுத்திறனாளிகள் நிலை உயர அறிவியல் உறுதுணையாக உள்ளதை கவனிக்க முடிகிறது. இதனை கடைகோடியிலுள்ள மாற்றுத்திறனாளியும் பெற் றிட பாடுபடவேண்டும்.
கல்வி யால் தான் நாம் பண்பட முடியும். இன்றைய இளைய சமு தாயத்தினருக்கு நற்பண்புகள், பாரம்பரியம், மதிப்பு சார்ந்த கல்வி, பிரச்னைகளை அணுகும் முறைகள், இருக்கும் வளங்களை உரிய வகையில் பயன்படுத்தும் திறமை ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இந்தி யாவை உலகின் குருவாக மாற்றவேண்டுமானால் அதற்கு அனைவரும் உரிய பங்களிப்பை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து குருபூஜையொட்டி மாநில அளவில் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர் பாராட்டினார்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு சென்னை, ஸ்ரீ ஹரிணி, ஸ்ரீ ராம் கிருபா பஜன்மண்டலி குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியும்,அன்னதானமும் நடந்தன. மதியம் 1 மணியளவில் வித்யாலய மாணவ மாணவிகள் வழங்கிய நாடகங்கள் மற்றும் நடனநாட்டிய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
பின்னர் மாலை 4 மணிக்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற தலைப்பில் சுவாமி விமோக்ஷானந்தரும், குருமூர்த்தி குணநிதி சாரதா மணி என்ற தலைப்பில் சென்னை நடராஜன் ஷியாம் சுந்தரும் சொற்பொழிவாற்றினர்.
மாலை 5 மணியளவில் சென்னை, ஓ.எஸ். அருண் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வித்யாலய செயலர் சுவாமி சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்