fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 342 மனுக்கள் மீது நடவடிக்கை

ராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 342 மனுக்கள் மீது நடவடிக்கை

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 342 மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய வட்டங்களில் விபத்துக்களால் இறந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளி நலவாரியம் சார்பில் 09 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.1.53 இலட்சம் மதிப்பீட்டிலான ஈமச்சடங்கு நிதியுதவியினையும், தாட்கோ துறையின் சார்பில் 21 தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.30,500/- மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகையினையும், 1 தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.25,000/ க்கான ஆணையினையும் ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், உதவி ஆணையர் (கலால்) வரதராஜ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனசுகுமார், நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ மேலாளர் அமுதாராஜ், ஆட்சியர் அலுவலக மேலாளர் ஜெய்குமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img