ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா காரை கூட்ரோட்டில் குழந்தை கள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் சிறுவர்களுக்கான அரசினர் வரவேற்பு இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் 22 குழந்தைகளின் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் விருப்பக் கொடை நிதியில் இருந்து மிதிவண்டிகள், வண்ண மேசைகள் – வண்ண நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கட்டில்கள் உள்ளிட்ட ரூ.1.32,450 மதிப்பிலான பொருட்களை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, கண்காணிப்பாளர்கள் விஜயகுமார். கண்ணன் ராதா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.