கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 7000 ஆயிரம் ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னை கரங்கள் நடத்திய நிகழ்வில் ரத்த தானத்தை வலியுறுத்தி ரத்த கொடை அடையாள வடிவில் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கொடையாளர்களுடன் இணைந்து கலெக்டர் ரத்த தானம் செய்வோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதிமொழி ஏற்றார்.
தொடர்ந்து அன்னை கரங்கள் ஒருங்கிணைப்பாளர் கோபி முன்னிலையில் கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.