fbpx
Homeபிற செய்திகள்நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையில் ரேலா மருத்துவமனை சாதனை

நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையில் ரேலா மருத்துவமனை சாதனை

தூத்துக்குடியை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு 8 வயதாக இருந்த போது காசநோய் தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, 24×7 அடிப்படையில் ஆக்சிஜன் ஆதரவு பெற வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், மூளைச்சாவடைந்த ஒரு நோயாளியின் நுரையீரல்கள் தஞ்சாவூரிலிருந்து சேகரிக்கப்பட்டு சென்னைக்கு பயணியர் விமான சேவை வழியாகவும் மொத்தத்தில் 2 மணி நேரங்கள் மற்றும் 20 நிமிடங்கள் என்ற குறுகிய கால அளவிற்குள் ரேலா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.

ரேலா மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் இதய மார்பறை அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். ஸ்ரீநாத் விஜயசேகரன் மற்றும் உறுப்பு மாற்று நுரையீரல் பிரிவின் கிளினிக்கல் லீடு டாக்டர். ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ நிபுணர்களின் குழு 4 மணி நேர காலஅளவில் இந்த இளம்
பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.

இந்த சிகிச்சையின் வெற்றி குறித்து ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா, டாக்டர் ஸ்ரீநாத் விஜயசேகரன், டாக்டர். ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img