fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் முதல் குடல் மறுவாழ்வு மையத்தை தொடங்கி ரேலா மருத்துவமனை சாதனை

இந்தியாவின் முதல் குடல் மறுவாழ்வு மையத்தை தொடங்கி ரேலா மருத்துவமனை சாதனை

சென்னை ரேலா மருத்துவமனை, குடல் சார்ந்த மறுவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவிற்கான ஒரு மையத்தை தொடங்கியிருக்கிறது. இத்தகைய மருத்துவ மையம் இந்நாட்டின் தொ டங்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
ரேலா மருத்துவமனை யின் தலைவர் புரொபசர் முகமது ரேலா கூறியதாவது: பொதுவாக குடல்சார் செயலிழப்பு என்பது, குழந்தைகளில் அரிதானது என்றாலும், குறைப்பிரசவ குழந்தைகளை இது கணிசமாக பாதிக்கிறது. இந்தியாவிலிருந்தும் மற்றும் அண்டை நாடுக ளிலிருந்தும் அதிக எண் ணிக்கையிலான குழந் தைகள் இப்புதிய மையம் வழங்கும் சேவைகளினால் பலனடைவார்கள்

இவ்வாறு அவர் கூறினார். ரேலா மருத்துவமனை யின் குடல் மறுவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மையத்தின் இயக் குனர் புரொஃபசர் அனில் வைத்யா கூறுகையில், “குடல் செயலிழப்பு மற்றும் சிக்கலான இரைப்பை குடல் பாதிப்புகள் உள்ள பச்சிளம் குழந்தைகள், குழந் தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு பல்வேறு துறைகள் சார்ந்த விரிவான ஆதரவை வழங்குவதில் எங்களது மையம் தன்னை அர்ப்பணித்துக் கொண் டிருக்கிறது’’ என்றார்.

ரேலா மருத்துவமனை யின் மகளிர் மற்றும் குழந்தை நல துறையின் இயக்குனர் டாக்டர். நரேஷ் சண்முகம் கூறியதாவது: உறுப்பு மாற்று சிகிச் சைக்கான தேவைகளை குறைக்கவும், நீண்டகால சிகிச்சை விளைவுகளை மேம்படுத்த வும் மற்றும் உடல்நல சிகிச்சைக்கான செலவு களை குறைப்பதும் எமது நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார். ரேலா மருத்துவமனையின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். இளங்குமரன் கலிய மூர்த்தி பேசுகையில், “எண்ணற்ற குழந்தைகள் பயனடையக்கூடிய தனித் துவமான சேவைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கும் ” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img