fbpx
Homeபிற செய்திகள்ரிபோஸ் மேட்ரஸ் வணிக வளர்ச்சியை வலுப்படுத்த யு.கே அண்ட் கோவுடன் இணைந்தது

ரிபோஸ் மேட்ரஸ் வணிக வளர்ச்சியை வலுப்படுத்த யு.கே அண்ட் கோவுடன் இணைந்தது

மேட்ரஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரிபோஸ் மேட்ரஸ் தங்களது வணிக வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த யு.கே அண்ட் கோவுடன் கைகோர்த்துள்ளது. 

இதன் மூலம்  மேட்ரஸ்  தொழிலில்  புதிய உயரத்தை தொட ரிபோஸ் மேட்ரஸ் தன்னை தயார்படுத்தி  கொண்டுள்ளது.

இந்த கூட்டணி மூலம் தயாரிப்பு தொழில்நுட்பம், விற்பனை, மார்க்கெட்டிங், விநியோகம், நிதி திட்டமிடல் போன்ற பிரிவுகளில் மேம்பட சிறந்த உத்திகளை யு.கே அண்ட் கோ வழங்க உள்ளது.

இது குறித்து யு.கே அண்ட்கோ நிறுவனர் உல்லாஸ் காமத் கூறுகையில், “எங்களின் கூட்டணி மூலம் ரிபோஸ் இன் வணிக உத்திகளை மேம்படுத்திக் புதிய உயரங்களை அடைய துணை நிற்போம்” என்றார்.

ரிபோஸ் மேட்ரஸின் நிர்வாக இயக்குனர் பாலசந்தர்  கூறுகையில், “உலகத்தரமான மேட்ரஸ்களை வடிவமைத்து  விற்பனை செய்ய வேண்டும் என்ற எங்களது குறிக்கோளை அடைய யு.கே அண்ட் கோவுடனான கூட்டணி உதவும்” என்றார்.

மேலும் இணை நிர்வாக இயக்குனர் ராம்நாத் பட் கூறுகையில், “வாடிக்கையாளர்களின்  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ரிபோஸ் மேட்ரஸ் தனது தயாரிப்புக்களை மேம்படுத்தவும் மார்க்கெட்டில் எங்களை வலிமை பெறச்செய்யவும்  இந்த கூட்டணி  உதவும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img