தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறை தலைவர் இரா.சு. முருகன் எழுதிய ‘ரிசர்ச் அன்ட் பப்ளிகேஷன் எத்திக்ஸ்’ என்கிற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலை தமிழ்ப் பல்க லைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன் வெளியிட, முதல் படியை இலங்கை வெளியுறவு மற்றும் ராஜதந்திர உறவுகள் அமைச்சகத்தைச் சார்ந்த இளையோர் பாராளுமன்றத் துணை அமைச்சர் அகமத் சாதிக் பெற்றுக்கொண்டார்.
அப்போது, துணைவேந்தர் கூறுகையில்,
“இந்த நூல் ஆய்வாளர்களுக்கு ஒரு சான்றாதாரமாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், வளர் தமிழ்ப்புல முதன்மையர் இரா. குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையர் பெ. இளையாபிள்ளை, இலக்கியத்துறை தலைவர் ஜெ. தேவி, அயல்நாட்டு தமிழ் கல்வி துறை இணைப் பேராசிரியர் ஞா. பழனிவேல், மொழி பெயர்ப்பு துறை இணைப் பேராசிரியர் ப. ராஜேஷ், அகராதியியல் துறை இணைப் பேராசிரியர் சி. வீரமணி, சமூக சேவகர் இன்பேன்ட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.