fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு - முதல்வருக்கு தோப்பு வெங்கடாசலம் நன்றி

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு – முதல்வருக்கு தோப்பு வெங்கடாசலம் நன்றி

இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக முதல்வர் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு மத்திய மாவட்டம் செயலாளர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை ஒட்டி பெருந் துறையில் இரண்டு நாட்கள் ஆண்கள் பெண்கள் அணி கைப்பந்து போட்டியை அவர் நடத்தினார். அதில் வெற்றி பெற்ற பல்வேறு அணிகளுக்கும் அவர் கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசு வழங்கி பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் நியமனம் செய்யப்படும் இடங்களுக்காக உரிய சட்ட திருத்தம் வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தில் கொண்டுவரப்படும் என்று தனது பிறந்த நாள் பரிசாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் என்ற சொற்றொடரை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். மாற்றுத்திறனாளிகள் நலத்து றையை அவர் தனது கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டார். அதன் மூலம் அவர்கள் நல்வாழ் வுக்கு பல திட்டங்களை அவர் அமலாக்கினார்.

அவரது வழியில் முதல்வர் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக் கீட்டை அரசு நிறுவனங்க ளில் நான்கு சதமாகவும், தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5% மாதாந்திர உதவி தொகையை ரூ1000 இருந்து 1500, 1500 இருந்து 2000, பட்ஜட் நிதி ஒதுக்கீட்டை ரூ1200 கோடியிலிருந்து ரூ.1400 கோடி, மாவட்டங்களுக்கான பெட்ரோல் ஸ்கூட்டரை 40ல் இருந்து 300 ஆக உயர்த்தியவர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரி ஸ்கூட்டர் வாங்கியவர் கள் தற்பொழுது பெட்ரோல் ஸ்கூட்டர் பெற உத்தரவிட்டவர். முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு இலவச பட்டா மற்றும் தமிழக வாழ்வாதார திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கவும் உத்தரவிட்டவர். ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆட்சியில் 67 வீட்டு மனை பட்டா பெற்றோர்களுக்கு வரும் நிதியாண்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டவர்.

மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண்கள், தமிழ் புதல்வன், நான் முதல்வன், காலை உணவு திட்டம், நம்மை காக்கும் 48 போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை வாரி வழங்கியவர். எல்லோருக்கும் எல்லாம் என்று இந்த திராவிட மாடல் அரசில் எல்லா தரப்பு மக்களும் முன்னேற உதவும் முதல்வர் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img