காவல் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்த காவல் அதிகாரிகளின் சந்திப்பு நிகழ்ச்சி திருப்பூர் ஏ.கே.ஆர் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. விழா விற்கு தலைவர் ஜி.சி.பழனிசாமி தலைமை தாங்கினார். ஏ.ராஜு முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் அனைத்து முன்னாள் போலீசாரும் உரையாடி தங்கள் கடந்த கால சிறப்பு களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஜி.கே.வாசுதேவன் விருந்தினர்களையும், 5 மாவட்ட காவல் அதிகாரிகளையும் வர வேற்று பேசினார். திருப்பூர் மாவட்ட மாநகராட்சி ஆணையர் எஸ்.ராம மூர்த்தி சிறப்புரை ஆற் றினார். அப்போது, அவர் பேசுகையில், ஒற்று மையே பலம், வருடா வருடம் அல்ல நல்ல நினைவலைகளை அடிக்கடி பகிர்ந்து கொள்ள வேண் டும்.
உடல் ஆரோக்கியத் தைகவனிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட கருவூல அலுவலர் பி.முருகேசன் பேசுகையில், ஊதியம், சம் பந்தமாகவும், ஓய்வு ஊதிய முரண்பாடுகளையும், வங்கி பரிவர்த்தனைகளையும் முறையே சரி செய்து கொடுப்பதாக கூறினார். Êசமூக ஆர்வலர் கீதா கணே சன் பேசுகையில், காவல் பணி சிறப்பு பற்றியும், தினமும் நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை நன்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தலைவர் ஜி.சி.பழனி சாமி பேசுகையில், ஜெம் ஆப் இந்தியா விருது பெற்றது பற்றியும், காவல் அதிகாரிகளுக்கு இலவச பேருந்து பயணம் செய்து கொள்ள ஆணைபிறப்பித்ததற்கும் காவலர்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கியதற்கும், முறையான காப்பீட்டு திட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து’ கொள்கிறோம், என்றார். விழாவில் இறுதி யாக பி.நடராஜ் விழாவிற்கு இடம் கொடுத்த பள்ளி தாளாளர் கே.ல-ட்சுமி நாராயணனுக்கும், 5 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட காவல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.