கோவையில் தீபாவளி கொண்டாடிய “ரீயூனியன்” ( Reunion) தீவு பிரெஞ்ச் பள்ளி மாணவ, மாணவிகள் – இந்திய கலச்சாரம், பாடமுறைகள் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் “ரீயூனியன்” ( Reunion) தீவில் இருந்து வந்த 8 மாணவ, மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்கள், இந்திய கலச்சாரம், மற்றும் பாடமுறைகள் குறித்து கடந்த 10 நாட்களாக கற்று வருகின்றனர்.
இறுதி நாளான இன்று கோவை பள்ளி மாணர்களுடன் சேர்ந்து ரீயூனியன்( Reunion) தீவு பள்ளி மாணவ, மாணவிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் உண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இவர்களது அழைப்பை ஏற்று கோவையில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் விரைவில் ரீயூனியன் ( Reunion) தீவிற்கு செல்ல உள்ளனர்.
இது குறிந்து ரீயூனியன் பள்ளி மாணவிகள் கூறுகையில் ,
தங்கள் தீவில் முழுமையாக பிரெஞ்சு முறை பாடதிட்டமே பின்பற்றபடுவதாகவும், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பாட நேரத்தை விட தங்கள் தீவில் கூடுதல் நேரம் பள்ளி செயல்படுவதால் வீட்டு பாடங்கள் செய்வதில் பெரும் சவாலான சூழல் உள்ளது. இந்திய பாடமுறை, அனைவருக்கு சமமாக சீருடை போன்ற விஷயங்கள் தங்களை கவர்ந்துள்ளது.
தங்களது தீவில் 30 சதவீதம் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் இருப்பதால் உணவு முறைகளில் பெரிய மாற்ற இல்லை, ஆனால் காரம் சற்று கூடுதலாக உள்ளது என தெரிவித்தனர். மேலும் இந்த வாய்ப்பு மூலம் பல்வேறு புதிய விஷயங்களை தாங்கள் கற்றாக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.அதே போல இந்திய மாணவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.