தமிழகத்தில் முதன் முதலாக கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முழுமையான ரோபோடிக் சிஸ்டத்தை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார்.
மருத்துவத் துறையில், குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நவீன ரோபோட்டிக் சிகிச்சை முறை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து வருகிறது.
அந்த வகையில் மூட்டு மாற்று சிகிச்சை முறையில் ரோபோட்டிக் சிஸ்டத்தை கோவை ரெக்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.
அறிமுக விழா
இதற்கான அறிமுக விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவர் ரெக்ஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு புதிய மூட்டு மாற்று ரோபோட்டிக் சிஸ்டத்தை அறிமுகம் செய்து பேசியதாவது:
மனிதர்களுக்கு மகிழ்ச்சியான, நோயற்ற ஆரோக்கிய வாழ்வு அவசியம். அதற்கு மருத்துவர்களே மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றனர். மருத்துவத் துறையில் நவீன மாற்றங்கள் வருவது மனித குலத்திற்கு பயனளிக்க கூடியதாக இருக்கிறது.
தற்போது நவீன மருத்துவ உபகரணங் கள் மனிதனின் உடல் செயல் பாடுகளை பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு மிகுந்த உதவி யாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மருத்துவர் ரெக்ஸ் பேசுகையில், தமிழகத்தில் முதன் முறையாக
அறிமுகம் செய்துள்ள இந்த ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் துல்லியமாக சிகிச்சை செய் வதோடு நோயாளிகள் விரைவில் குணமடையவும் முடியும் என தெரிவித்தார்.
கௌரவ அழைப்பாளர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் சிங்காரவேலு, செயலாளர் மருத்துவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.