fbpx
Homeபிற செய்திகள்சாலைகள் அமைக்கும் பணியை துவக்கிய ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ

சாலைகள் அமைக்கும் பணியை துவக்கிய ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ

மாவட்ட கவுன்சிலர் நிதியின் இருந்து ரூபாய் 5.65 லட்சம் மதிப்பில் தார் சாலையும் ஊராட்சி நிதியிலிருந்து 9.90 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலையும் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் துவக்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் நேஷனல் நகர் விநாயகர் கோயில் அருகே ரூபாய் 5.65 லட்சம் மதிப்பில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து தார் சாலை அமைக்கும் பணிக்கும் சம்ப் அருகே ஊராட்சி நிதியிலிருந்து ரூபாய் 9.90 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. பணியை சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பி.டி. கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் சரித, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் விமலா, வார்டு உறுப்பினர் செந்தில், கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், ஒப்பந்ததாரர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img