fbpx
Homeபிற செய்திகள்அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடத்தப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் கலந்துகொண்டு பேசுகையில், தமிழக அரசு மாணவ மாணவியர்களுக்கு கல்வி அறிவு மட்டுமின்றி சாலை பாதுகாப்பு விதிமுறைகளை போதிப்பதிலும், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வாகனங்களை வடிவமைப்பதிலும், சாலை விதிமுறைகளை அமுல்படுத்துவதிலும், விபத்தின் போது பாதிக்க பட்டவர்களுக்கு உத வுவதிலும் முக்கிய பங் காற்றி வருவதாக எடுத்துரைத்தார்.

கல்லூரி மாணவ மாணவியரும் விபத்தில்லா பயணங்களை மேற்கொண்டு அரசுக்கும், சமூகத்திற்கும் ஒத்துழைக்க வேண்டும், என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக் கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர், போதை தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மன்ற தொடர்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன் பேசுகையில், நாமக்கல் மாவட்டம் விபத்தில்லா மாவட்டம் என பெயர் எடுப்பதற்கு மாணவ, மாணவியர் சாலைகளில் விழிப்புணர்வோடும், விதி முறைகளைப் பின்பற்றி பயணிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இறுதியாக சாலை பாதுகாப்பு குறித்த உறுதி மொழி எடுக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, சாலை பாதுகாப்பு மன்ற உறுப்பினர் சௌந்திரராஜன், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், வணிகவியல் மற்றும் கணிதவியல் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி சாலை பாதுகாப்பு மன்ற
ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img