தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் காரமடையில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதற்கு, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவகுமார் தலைமை வகித்தார். பேரணியில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை இயக்க வேண்டும், காரில் செல்லும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது, அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது என்பன உள்ளிட்டவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளர்கள், காரமடை போலீஸார், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.