fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ்சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ்சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ்சிட்டியின் 2023-&24-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழு பதவி ஏற்பு விழா கரூரில் நடந்தது.

ரோட்டரி மாவட்ட 3000-ன் முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட 3212 சிறப்பு விருந்தினர் ஏ.கே.எஸ்.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவராக அருள்அரசி பேப்ரிக்ஸ் பாக்கியராஜ், செயலாளராக எஸ்.எஸ்.அசோசியேட்ஸ் ராஜசேகர், பொருளாளராக எஸ்.எஸ்.டேலி சாப்ட்கேர் சசிகுமார் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

டெக்ஸ்சிட்டியின் நடப்பாண்டு நடைபெற உள்ள செயல் திட்டங்கள், இயற்கை வேளாண்மை மற்றும் இளைஞர்களிடையே விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம் பற்றியும், புதிய நிர்வாகக் குழுவையும் அறிமுகம் செய்து பேசினார் தலைவர் பாக்கியராஜ்.

மண்டல ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், மாவட்ட துணை ஆளுநர் சூர்யநாராயணா, உடனடி முன்னாள் தலைவர் வடிவேல், உப தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img