fbpx
Homeபிற செய்திகள்சங்கரா மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவமுகாம் நடத்திய ரோட்டரி சங்கம்

சங்கரா மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவமுகாம் நடத்திய ரோட்டரி சங்கம்

ரோட்டரி சங்கம் கோவை கிழக்கு, ரோட்டரி மாவட்டம் 3201, மற்றும் சங்கரா கண் மருத்துவமனை, கோவை மாவட்ட பார்வை இழப்பு சங்கத்தின் ஆதரவுடன் இணைந்து பாலமலை சாலை நெ1 நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் மண்டபத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ் சித்தார்த் தலைமையில் சங்க செயலாளர் கார்திக் நரேன் முன்னாள் தலைவர்கள் ரமேஸ்குமார், ஸ்ரீனிவாசன், மனோகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னராஜ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ராமசாமி மற்றும் கிழக்கு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு முகாமை நடத்தினார்கள். முகாமில் சுமார் 10 க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்று சங்கரா கண் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 25 பேர் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவ மனைக்கு அவர்களது பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை கண்மருத்துவ முகாம் தலைவர் ரொட்டேரியன் முன்னாள் தலைவர் ரமேஸ்குமார், முகாம் உதவி தலைவர் ரொட்டேரியன் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் சங்கரா கண்மருத்துவமனையின் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img