fbpx
Homeபிற செய்திகள்ராயல்கேர் மருத்துவமனையில் தசைக்கூட்டு கதிரியக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராயல்கேர் மருத்துவமனையில் தசைக்கூட்டு கதிரியக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராயல்கேர் மருத்துவமனை மஸ்குலோஸ்கெலிட்டல் அல்ட்ராசவுண்ட் சொசைட்டியுடன் இணைந்து சமீபத்தில் ராயல்கேர் மருத்துவமனை வளாகத்தில் ஆங்கில் ஹாட்ஸ் ஆன் எனும் கணுக்கால் தொடர்பான பயிற்சி கருத்தரங்கத்தை நடத்தியது.

டாக்டர் பிபின் ஷா மற்றும் டாக்டர் ராஜஸ் சௌபால் ஆகியோர் தலைமையில், சேலம், திருப்பூர், பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 20 பயிற்சி மற்றும் இளைய கதிரியக்க மருத்துவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இதில் சாதாரண சோனோ உடற்கூறியல், கணுக்கால் காயங்கள், நோயியல் பற்றின நேரடி விளக்கக்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து 3 மணிநேரம் தனிப்பட்ட பயிற்சிகள் பற்றிய பிரத்யேக விரிவுரைகள் நடந்தன.

இது குறித்து ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கூறும்போது:

தசைக்கூட்டு கதிரியக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இனி வரும் மாதங்களில் இளைய கதிரியக்க வல்லுனர்களின் நலனுக்காக இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியை ராயல்கேர் மருத்துவமனையின் கதிரியக்க மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் ஏற்பாடு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img