fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம்.மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் மாரத்தான்

ஜி.கே.என்.எம்.மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் மாரத்தான்

ஜி.கே.என்.எம்.மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்னும் மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சியினை நேற்று கோவை, பாப்ப நாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் நடத்தினர்.

கோவை நகர (தெற்கு) துணை காவல் ஆணையாளர் சரவணக்குமார், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெற்றது. 1-3 கி.மீ. குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்றாக ஓடினர். 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 5 கிமீ ஓட்டம் நடைபெற்றது. மேலும் 10 கி.மீ பிரிவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசு தொகை ரூ.75,000 வழங்கப்பட்டது. 2000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img