fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் நூல் வெளியீட்டு விழா

சேலத்தில் நூல் வெளியீட்டு விழா

சேலம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா கலை இலக்கியப் பேரவை ஓய்வுபெற்ற வணிகவரி உதவி ஆணையர் கவிஞர் ஆறுமுகத்தின் பாவலன் பாடிய பாரதி மற்றும் கோடி பெறும் கோவை ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா தமிழ் சங்கம் அண்ணா நூலகம் முதல் தளத்தில் நடைபெற்றது.

இதில் முனைவர் முருகேசபூபதி பாவலன் பாடிய பாரதி நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். முனைவர் பெரியண்ணன் கோடி பெறும் கோவை நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு முனைவர் இராசமாணிக்கம் தலைமை தாங்கினார். இளங்கோ, சந்திரசேகரன், எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத் துணைத் தலைவர்கள் பசுமை பழனிசாமி, நாகராஜன் ஆகியோர் மேடை மேலாண்மை செய்தனர்.

இந்நிகழ்வில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க பொது செயலாளர் ராமானுஜம், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சேலம் கிளை தலைவர் பொன் சந்திரன்,
செயலாளர் மோகன் குமார், ஆறுமுகம், மனம் மன்றம் மருத்துவர் பன்னீர் செல்வம் ஆகியோர் நூல் பெற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

நூல் வெளியீட்டு விழாவில் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா கலை இலக்கியப் பேரவை தலைவர் பாமா ஆறுமுகம் நூல் ஆசிரியர் ஏற்புரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img