fbpx
Homeபிற செய்திகள்பனமரத்துப்பட்டிக்கு ரூ.101.43 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

பனமரத்துப்பட்டிக்கு ரூ.101.43 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி நேற்று செய்தியாளர் பயணத்தின்போது நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டம், பனமரத்துப் பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊராட்சி பொது வளர்ச்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15வது ஒன்றிய நிதிக் குழு, கலைஞர் கனவு இல்லம், நபார்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.101.43 கோடி மதிப்பீட்டிலான 2,867 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,031 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 836 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், பனமரத்துப் பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்துமிடத்திற்கு பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய குளம் அமைக்கப்பட்டுவரும் பணிகளும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நிலவாரப்பட்டி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அய்யனாரப்பன் கோவில் அருகில் மினி சமுதாய கழிப்பறை வளாகம் கட் டப்பட்டுள்ளதையும், பள்ளி தெருப்பட்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளிதெருப்பட்டி முதல் மல்லூர் சாலை வரை ரூ.47.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைவாகவும் உரிய தரத்திலும் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிதெருப்பட்டி மற்றும் வெடிகாரன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் இரண்டு புதிய வகுப்பறை கட்டடப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்திற்கு முன்புறம் நடைபாதை கற்கள் பதிக்கும் பணிகள் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

அதேபோன்று, பனமரத்துப் பட்டி பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட 3 பணிகள் ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img