சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு தொழில் கூட்டமைப்பினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்தியர்கள் விண்வெளிக்கு போவது என்பது கூடிய சீக்கிரம் மூன்று நான்கு வருடத்திற்குள் நடக்கலாம். இதைத் தாண்டி இரண்டு வகை ஒன்று நிலவில் இறங்க வேண்டும்.
மற்றொன்று அங்கு இறங்கி அங்கிருந்து பத்திரமாக திரும்பி வருவதற்கான உறுதியைச் செய்ய வேண்டும். விண்வெளிக்கு பத்திரமாக போய் இறங்கி மீண்டும் திரும்பி வரும் என்ற கட்டம் வர இன்னும் பத்து பதினைந்து வருடமாவது ஆகும். இதைத் தாண்டி சர்வதேச அளவில் நடக்கக்கூடிய பல நிகழ்வுகளில் நாம் என்ன சொல்கிறோம் என்றால் சர்வதேச விண்வெளி மையம் நிலவிலேயே வைக்க வேண்டும் என சொல்கிறோம்.
சர்வதேச ஒத்துழைப்போடு போகும்போது இந்தியர் கள் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிற. இந்த வகையில் மூன்று கட்டமாக பார்க்கிறோம் இந்தியர்கள் விண்வெளிக்கு போய் வருவது இந்தியர்கள் பத்திரமாக திரும்பி வருவது அதையும் தாண்டி மூன்றாம் கட்டமாக சர்வதேச ஒத்துழைப்பு மூலமாக இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பிற்கான வாய்ப்புகள் 10 வருடத்திற்குள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது
சமீபத்தில் பல இடங்களில் ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை செய்வதை மிக குறைந்த செலவில் சாத்தியப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோபோட்டிக் மூலம் அறுவை சிகிச்சையில் செய்வது எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு அனுமதியுடன் ரொபட்டிக் சிகிச்சை நடைபெறுவதற்கான கட்டணங்களை நான்கில் ஒரு மடங்காக குறைத்து செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளது இதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எங்கிருந்தாலும் தொலைதூரத்தில் இருந்தபடி ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இது குரிய வசதியை ஏற்படுத்தி விட்டால் நகரத்தில் இருந்தபடியே அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு உருவாகும் இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர் களிடம் கூறினார்.