fbpx
Homeபிற செய்திகள்உழவர் சந்தையில் முறைகேடு புகார்: பாமக எம்எல்ஏ தர்ணா போராட்டம்

உழவர் சந்தையில் முறைகேடு புகார்: பாமக எம்எல்ஏ தர்ணா போராட்டம்

சேலம் சூரமங்கலம் உழவர்சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் உழவர்சந்தைக்கு நேற்று காலை வந்தார். திடீரென அவர் உழவர்சந்தை முன்பு தரையில் அமர்ந்து ஒரு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன் பின்னார் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ அருள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இ-நாம் திட்டத்தில் வேளாண் துறை அதிகாரி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்.

உழவர் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளுக்கு, வெளி மார்க்கெட்டுகளை விட கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகள் அல்லாத நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தக்காளி மொத்தமாக கொள்முதல் செய்து உழவர்சந்தை மூலம் விற்பனை செய்து, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து விசாரித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒரு மாதத்திற்குப் பின்னர் அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்தப் படும் என்றார்.

பாமக மாவட்டத் தலைவர் கதிர்ராசரத்தினம், பசுமை தாயகம் நிர்வாகி சத்ரிய சேகர், இளைஞர் சங்க நிர்வாகி விஜய்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img