சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 67-ம் ஆண்டு விழாவானது ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை, அசோக் லேலேண்ட் தயாரிப்பு மேம்பாடு துணைத் தலைவர் டி.பாலகிருஷ்ணன் மற்றும் சென்னை, ஜோஹோ கார்ப்பரேஷன் இயக்குனர் (தயாரிப்பு மேலாண்மை) ராஜலட்சுமி சீனிவாசன் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கல்லூரியின் துணை முதல்வர் பி.முனுசாமி வரவேற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் டாக்டர் ஏ.கனகராஜ் தமது ஆண்டு அறிக்கையில், கல்லூரி நான்காவது முறையாக NBA தரச்சான்று, தேசிய அளவிலான தன்னிகரற்ற உயர்தர கல்வி மற்றும் சிறந்த செயல்திறனுக்காக இன்ஜினியரிங் எஜுகேஷன் எக்ஸலன்ஸ் விருது பெற்றதையும் பெண்கள் டிசைன் ஹேக்கத்தான்ஸ் போட்டியில் இரண்டாம் பரிசு, மேலும் கல்லூரியின் எண்ணற்ற சாதனைகள், 250க்கு மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி தொலைநோக்குத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி தலைவர் சொ.வள்ளியப்பா தலைமை உரை யில், சவால்களை எல்லாம் சாத னைகளாக மாற்ற வேண்டும் எனக் கூறி மாணவர்களை ஊக்கப்ப டுத்தினார். கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், புதுமை கண்டுபிடிப்புகளுடன் தொழில்கள் துவங்குவதற்கு, மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவி அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
கல்லூரியின் இயக்குனர் டாக்டர் வி..கார்த்திகேயன் சிறப்புரையாற் றினார். தொழில் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இக்கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கல்வியில் முன்னிலை பெற்ற மாணவ, மாணவியருக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும் துறை வாரியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் 2500-க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.