fbpx
Homeபிற செய்திகள்ஏற்காட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிறைந்தது மனம் திட்டத்தில் ஆய்வு

ஏற்காட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிறைந்தது மனம் திட்டத்தில் ஆய்வு

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், ஏற்காடு மற்றும் மஞ்சக்குட்டை ஊராட்சிகளில் “ஊரக வீடுகள் சீரமைத்தல்” திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி “நிறைந்தது மனம்” நிகழ்வின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 2000-2001-ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு அரசுத் திட்டங் களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்கம் செய்யும் பொருட்டு ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பழுதுநீக்கப் பணி கள் நடைபெற்று வருகிறது.

ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு முழுவ தும் ஒரு லட்சம் வீடுகளை சீர மைக்க அனுமதி வழங்கப்பட்டு, தேவைக்கேற்ப சிறு மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

ஊரக வீடுகள் சீரமைத்தல்” திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் தற்பொழுது
2024-25-ஆம் நிதியாண்டிற்கு 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,944 வீடுகள் சீரமைப்பதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு அதற்குரிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு, வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.26.13 கோடி மதிப்பீட்டில் 3,944 வீடுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 1,458 வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,486 வீடுகள் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று, தற்பொழுது 2024-25-ஆம் நிதியாண்டிற்கு 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,500 வீடுகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் ஏற்காடு மற்றும் மஞ்சக்குட்டை ஊராட்சிகளில் “ஊரக வீடுகள் சீரமைத்தல்” திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வரும் வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, இப்பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட் டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் வீடு சீரமைப்பதற்கான ஆணை பெற்று, வீடு சீரமைக்கப்பட்டு வரும் பயனாளி மோகன்ராஜ் தெரிவித்ததாவது: நான் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்குட்டை ஊராட் சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே பழைய வீட்டிலேயே வசித்து வருகிறோம். இந்நிலையில் “ஊரக வீடுகள் சீரமைத்தல்” திட்டத்தில் பழைய வீடுகளை சீரமைத்துத் தருவதாக தெரிவித்ததை செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தோம்.

உடனடியாக எங்களது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகினோம். இதன்படி எங்களது வீட்டினை சீரமைக்க ஏதுவாக ஒதுக்கீடு ஆணை எங்களுக்கு வழங்கப்பட்டது.
ஒதுக்கீடு ஆணை பெற்றவுடன் வீடு சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தொகையாக ரூ.72,000/- எங்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த வீட்டில் பாதுகாப்பின்றி வாழ்ந்த எங்களுக்கு வீட்டினை சீரமைத்துக் கொடுத்து பாதுகாப்பான வாழ்விற்கு வித்திட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img