fbpx
Homeபிற செய்திகள்கோவை சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் தேசிய உழவர் தின விழா

கோவை சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் தேசிய உழவர் தின விழா

கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில்(SVPISTM)), டிசம்பர் 23 அன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டத்தின் காரமடை தொகுதியில் உள்ள பெத்திகுட்டை மற்றும் சம்பரவள்ளி புதூர் கிராமங்களிலிருந்து வாழை, தினை, காய்கறி சாகுபடி, பட்டுப்புழு மற்றும் கோழி வளர்ப்பு, கால்நடைத் தீவன உற்பத்தி செய்யும் பத்து விவசாய குடும்பங்கள் பங்கேற்றனர்.

கல்லூரியின் இயக்குநர் முனைவர் பி. அல்லி ராணி இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். இதில் அவர் கூறுகையில், “விவசாயிகளின் தொழில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதால் அவர்களுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்“என்றார்.

மாணவர்கள் கருப் பொருளுக்கு ஏற்றவாறு கலை நிகழ்ச்சிகள் மூலம் நிகழ்வை மெருகேற்றினர்.

பட்டுப்புழு மற்றும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு, தனது இடத்தில் வாழை சாகுபடி செய்து வரும் விவசாயி எஸ். மகாலிங்கம், கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து, பெத்திகுட்டை மற்றும் சம்பரவள்ளி புதூர் விவசாயிகள் எதிர்கொள்ளும் துன்பங்களைப் பற்றிப் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img